‘வாரிசு’ படத்திற்கு இணையாக ’துணிவு’ – வெளிநாட்டு உரிமையை பெற்ற நிறுவனம் அதிரடி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் அஜித் நடிக்க இருக்கும் 62வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இதற்காக அஜித்துக்கு அந்நிறுவனம் 105 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இந்தநிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் அஜித்தின் 62வது படத்தை தயாரிப்பதற்கு முன்னரே அஜித்தின் 61வது படமான ’துணிவு’ படத்தின் வெளிநாட்டு உரிமையை லைக்கா மற்றும் டெண்ட்கொட்டா ஆகிய இரண்டு நிறுவனங்களும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ’துணிவு’ படத்தை அதிக திரையரங்குகளில் அனைத்து நாடுகளிலும் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Ajith, Varisu,AK62, Thunivu, 16th Nov 2022

அடுத்த ஆண்டு ’துணிவு’ திரைப்படம் வெளியாகும் அதே நாளில் ’வாரிசு’ திரைப்படம் வெளியாக உள்ளது. ’வாரிசு’ படத்திற்கு உலகம் முழுவதும் பல திரையரங்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ’துணிவு’ படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட உள்ளதால் ‘வாரிசு’ படத்திற்கு இணையாக ’துணிவு’ படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டுள்ளதாக கூறப்படுகிறது.