நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை காலமானார் – இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்

பழம்பெரும் நடிகரும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தந்தையுமான நடிகர் கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக நேற்று அதிகாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று இரவு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு இருந்தது.

Maheshbabu, Krishna, 15th Nov 2022

வெளியான தகவலின் படி நடிகர் கிருஷ்ணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தெலுங்கு திரையுலகினர் நேரில் சென்று கிருஷ்ணாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருவதுடன் நாடு முழுவதுமுள்ள திரையுலக பிரபலங்கள் தங்கள் இரங்கலை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Maheshbabu, Krishna, 15th Nov 2022

கிருஷ்ணா கடந்த 1965-ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு ஏராளமான திரைப்படங்களில் நடித்தார் என்பதும் அவர் நடித்த திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் கிருஷ்ணாவுக்கு மகேஷ்பாபு உள்பட 5 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா ஐந்து தலைமுறை நடிகர்களுடன் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விக்ரம் நடித்த ‘கந்தசாமி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.