லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழுவினர்

நடிகை நயன்தாரா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘O2’ மற்றும் ’காட்பாதர்’ ஆகிய மூன்று திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மேலும் ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Nayanthara, Prithiviraj, Gold, 15th Nov 2022

இந்நிலையில் நயன்தாரா மற்றும் அவருடன் இணைந்து பிரித்திவிராஜ் நடித்த மலையாள திரைப்படமான ’கோல்ட்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 2 என தகவல்கள் வெளியாகியுள்ளன.

’நேரம்’ மற்றும் ‘பிரேமம்’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nayanthara, Prithiviraj, Gold, 15th Nov 2022

இந்நிலையில் நயன்தாரா தற்போது ’ஜவான்’, ‘கனெக்ட்’, ‘இறைவன்’ உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார் என்பதும், இந்த நான்கு படங்களும் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.