‘ரஞ்சிதமே’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ஷிவானி நாராயணன்

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது.

Vijay, Varisu, Shivani Narayanan, 14th Nov 2022

இந்தநிலையில் இந்த பாடலுக்கு திரையுலக மற்றும் சின்னத்திரை உலக பிரபலங்கள் பலர் நடனமாடிய வீடியோவை தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வரும் நிலையில் அந்த வீடியோக்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தளபதி விஜய்யின் ‘ரஞ்சிதமே’ பாடலுக்கு பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஆட்டம் ஆடி உள்ளார். இந்த டான்ஸ் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவதுடன் ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

ஷிவானி நாராயணன் அவர்கள் விஜய் சேதுபதி நடித்து வரும் ’டிஎஸ்பி’ வடிவேலு நடித்து வரும் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன என்றும் கூறப்படுகிறது.