வாடகைத்தாய் குறித்து பேசும் ”யூகி”

நடிகர் கதிர் மற்றும் கயல் ஆனந்தி நடித்த ’பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் இருவரும் இணைந்து நடித்த ‘யூகி’ திரைப்படம் வரும் 18ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Jack Harish, Kayal Ananthi, Kathir, Yugi, 13th Nov 2022

இரண்டு நிமிடத்திற்கு மேல் உள்ள இந்த டிரைலரில் திடீரென ஒரு பெண் மர்மமாக மறைந்து விடுகிறார் என்றும் அவளைப் பற்றி சேகரிக்கும் செய்திகள் அனைத்தும் பொய்யாக இருக்கிறது என்றும் காவல்துறையினர் கண்டுபிடிக்கின்றனர். காணாமல் போன அந்த பெண்ணை கண்டு பிடித்தார்களா? என்பதுதான் இந்த படத்தின் கதை என டிரைலரில் இருந்து தெரிகிறது. மேலும் இந்த படத்தில் சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் வாடகைத்தாய் குறித்த பிரச்சினையும் அலசப்பட்டு உள்ளது என்பது டிரெய்லரில் இருந்து தெரியவருகிறது.

Jack Harish, Kayal Ananthi, Kathir, Yugi, 13th Nov 2022

ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு புஷ்பராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் ஜாமின் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ரஞ்சின் ராஜ் என்பவர் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப்படத்தில் கதிர், கயல் ஆனந்தி உள்பட பலர் நடித்துள்ளனர்.