‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் மணிரத்னம் செய்யவுள்ள திடீர் மாற்றம்!

’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் இந்த படம் உலகம் முழுவதும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து உலக சாதனை செய்துள்ளது என்பதும் தெரிந்ததே.

Ponniyin selvan, Manirathnam, Trisha, Aishwaryarai, 13th Nov 2022

இந்தநிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வந்த தகவலின் படி ’பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் வெற்றியை அடுத்து இரண்டாம் பாகத்தில் சில காட்சிகளை மீண்டும் படமாக்க இயக்குனர் மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஒரு சில முக்கிய காட்சிகளை இணைக்க மணிரத்னம் முடிவெடுத்துள்ளதாகவும் இதற்காக 7 முதல் 10 நாட்கள் வரை அவர் படப்பிடிப்பை நடத்த இருப்பதாகவும் த்ரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட ஒரு சிலர் இந்த படப்பிடிப்பில் நடிப்பார்கள் என்றும் இது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.