மிரள் படத்தை மலேசியாவில் வெளியிட திட்டமிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம்

M.சக்திவேல் இயக்கத்தில் Axess Film Factory, G.டில்லி பாபு தயாரிப்பில், பரத்-வாணி போஜன் ஆகியோரின் நடிப்பில் புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “மிரள்”. இப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

M sakthivel, Bharath, Vanipojan, Kalaivanan, 10th Nov 2022

பிரபல நிறுவனமான அம்மா புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தின் வெளி நாட்டு உரிமத்தை வாங்கியுள்ளதுடன் மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமன்றி இந்த படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெறும். இந்த நிகழ்வில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் கலந்துகொள்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

M sakthivel, Bharath, Vanipojan, Kalaivanan, 10th Nov 2022

முழுக்க முழுக்க திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படம் நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்தப்படத்தில் பரத், வாணிபோஜன், கே.எஸ்.ரவிகுமார், மீராகிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி உள்பட பலர் நடித்துள்ளனர். பிரசாத் இசையில் சுரேஷ் பாலா ஒளிப்பதிவில் கலைவாணன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.