விஜய் சேதுபதியின் ஐந்தாவது வெற்றி படமாக அமையும் என்று கூறப்படும் படத்தின் ரிலீஸ் தேதி

2022 ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி ‘கடைசி விவசாயி’, ’காத்துவாக்குல ரெண்டு காதல்’, ’விக்ரம்’ மற்றும் ’மாமனிதன்’ ஆகிய நான்கு வெற்றிப்படங்களை அளித்த நிலையில் தற்போது ஐந்தாவது படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Ponram, Vijay sethupathy, Anukeerthyvash, Pukal, Shivani Narayanan, D Iman, 09th Nov 2022

தற்போது விஜய்சேதுபதி பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’VJS46’. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

Ponram, Vijay sethupathy, Anukeerthyvash, Pukal, Shivani Narayanan, D Iman, 09th Nov 2022

டி.இமான் இசையில் உருவாகிய இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளதுடன் மேலும் இந்த பிக்பாஸ் ஷிவானி நாராயணன், குக் வித் கோமாளி புகழ் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 2 என்றும், இதுகுறித்த முறையான அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் விரைவில் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே நான்கு வெற்றிப்படங்களை இந்த ஆண்டு கொடுத்த விஜய் சேதுபதி ஐந்தாவது வெற்றி படத்தையும் கொடுப்பாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழும்பியுள்ளது.