41வது பிறந்த நாளில் அனுஷ்காவின் 48வது படம் குறித்த அறிவிப்பு

தமிழ், தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகை அனுஷ்கா தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்றைய பிறந்தநாளில் அவரது 48வது படம் குறித்த அறிவிப்பு தொடர்பான தகவல்களும் வெளிவந்துள்ளது.

Anushka, 07th Nov 2022

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லிங்கா’, விஜய் நடித்த ’வேட்டைக்காரன்’ அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ சூர்யா நடித்த ’சிங்கம்’ உள்பட பல படங்களில் நாயகியாக நடித்தவர் இதுமட்டுமன்றி எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’பாகுபலி’ திரைப்படம் இவரை உலக அளவில் பிரபலம் ஆக்கியது என்பது தெரிந்ததே.

Anushka, 07th Nov 2022

அந்த வகையில் 41வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில் அனுஷ்கா நடிக்கவிருக்கும் 48வது படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் அவரது கேரக்டர் குறித்த போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த படத்துக்கு அனுஷ்கா, அன்விதா ரவாலி ஷெட்டி என்ற குக்கிங் செஃப் கேரக்டரில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும்.