தனுஷ் நடித்து முடித்துள்ள ‘வாத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் சற்று முன் ‘வாத்தி’ படத்தின் சிங்கிள் பாடல் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என்றும் மேலும் இந்த பாடலை தமிழில் தனுஷ் எழுதி உள்ளதாகவும் தெலுங்கில் ராமஜோகையா சாஸ்திரி எழுதி உள்ளதாகவும் கூறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன், சாய்குமார், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’, ’நானே வருவேன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற்றுள்ள நிலையில் ‘வாத்தி’ தனுஷின் ஹாட்ரிக் வெற்றிப்படமாக இருக்கும் என நம்பப்படுகிறது.