பொங்கலுக்கு முதலே அஜித் ,விஜய் மோதல் – காரணம் இவரா?

அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித் நடித்த ‘துணிவு’ மற்றும் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆக இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பே மீண்டும் ஒருமுறை அஜீத் விஜய் மோதல் ஏற்படும் என்றும் அந்த மோதலுக்கு அனிருத் காரணமாக இருப்பார் என்று கூறப்படுகிறது.

Varisu, Vijay, Ajith, Thunivu, Aniruth, Jipran, 06th Nov 2022

விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தில் விஜய் பாடிய ‘ரஞ்சிதமே’ என்ற சிங்கிள் பாடல் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அஜித் நடித்த ’துணிவு’படத்தின் சிங்கிள் பாடலும் விரைவில் வெளியாகும் என்றும் இந்தப் பாடலை அனிருத் பாடி உள்ளதாகவும் நேற்று இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் அறிவித்து இருந்தார். மேலும் இந்த பாடல் நவம்பர் மூன்றாவது வாரம் ரிலீசாகும் என்று கூறப்பட்டுள்ளது.

Varisu, Vijay, Ajith, Thunivu, Aniruth, Jipran, 06th Nov 2022

இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலும் அதே நவம்பர் மூன்றாவது வாரம் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் இந்த பாடலையும் அனிருத் தான் பாடியுள்ளார் என்பது ஆச்சரியத்திற்குரிய ஒன்றாகும்.

‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ ஆகிய இரண்டு படங்களுக்கும் அனிருத் பாடியுள்ள பாடல்களில் எந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகும் என்றும், அனிருத் யாருக்கு சிறப்பாக பாடி இருப்பார் போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.