கேட்கும்போதே ஆட்டம் போட வைக்கும் விஜயின் ‘ரஞ்சிதமே’ பாடல் ரிலீஸ்

வம்சி இயக்கத்தில், தில் ராஜ் தயாரிப்பில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தின் சிங்கிள் பாடலான ‘ரஞ்சிதமே’ என்ற பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் இந்த பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vamsi, Thaman, Vivek, Vijay, Varisu, 05th Nov 2022

மேலும் இந்தப்பாடலில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரும் கலர்ஃபுல் காஸ்ட்யூம் அணிந்து, பிரம்மாண்டமான வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய செட்டில் படமாக்கப்பட்ட இந்த பாடல் வீடியோ செம மாஸாக உள்ளது.

விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை விஜய் மற்றும் எம்.எம்.மானசி பாடியுள்ளதுடன் இந்த பாடலை தமன் இசையமைத்துள்ளார். இந்த பாடலை முதல்முறை கேட்கும்போதே ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு பாடல் உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவதால் இந்த பாடல் திரையரங்கில் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் என்பதில் ஐயமில்லை.

Vamsi, Thaman, Vivek, Vijay, Varisu, 05th Nov 2022

இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் சற்றுமுன் ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி ‘வாரிசு’ திரைப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்று குறிப்பிடத்தக்கது.