என் படத்தில் நீ நடிக்க வேண்டாம்.. ’காபி வித் காதல்’ நாயகனிடம் கூறிய நடிகர் விஜய்

நேற்றைய தினம் 4 படங்கள் ரிலீசாகின. அதில் ஒன்று சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ’காபி வித் காதல்’ என்பதும் இந்த படத்தின் ஹீரோக்களில் ஒருவராக ஜெய் நடித்திருந்தார். இந்த படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் நடிகர் ஜெய் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் மறக்கமுடியாத சம்பவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

Vijay, Bhakavathy, Jei, Coffe with Kadhal 05th Nov 2022

விஜய் நடிப்பில் வெளிவந்த ’பகவதி’ திரைப்படத்தில் ஜெய் அவருடைய சகோதரர் கேரக்டரில் நடித்து இருந்தார் என்பதும் இந்த படம் வெளியாகி நேற்றுடன் 20 ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து இந்த படம் குறித்த மலரும் நினைவுகளை ஜெய் அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஜெய் கூறியதாவது ’பகவதி’ படத்தில் நடிக்கும் போது தான் பதட்டமாக இருந்ததாகவும் ஒரு சில காட்சிகளில் பல ஷாட்கள் எடுக்கப்பட்டதாகவும் கூறிய ஜெய், அப்போதெல்லாம் விஜய் தனக்கு ஆறுதல் கூறுவார் என்று பயப்படாமல் நடி என்று தைரியம் அளிப்பார் என்றும் கூறினார்.

Vijay, Bhakavathy, Jei, Coffe with Kadhal 05th Nov 2022

இதுமட்டுமன்றி இந்த படம் ஹிட்டானதை அடுத்து மீண்டும் ஒரு படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்ததாகவும் ஆனால் ஹீரோவாக நடிப்பதில் நீ முயற்சி செய்ய வேண்டும் என்றும் என் படத்தில் நடிக்க வேண்டாம் என்று எனக்கு அறிவுரை கூறியதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் விஜய்யுடன் சரியான நேரத்தில் ஒரு படத்தில் நடிக்க நான் ஆர்வமுடன் காத்திருக்கின்றேன் என்றும் ஜெய் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். விஜய் படத்தில் தற்போது பல முன்னணி ஹீரோக்கள் நடித்து வரும் நிலையில் ஜெய்க்கும் விரைவில் வாய்ப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.