ரஜினிகாந்த் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படம் குறித்த மாஸ் தகவல்

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜெயிலர்’ என்ற படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் அடுத்ததாக லைகா நிறுவனத்தின் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

Aishwarya Rajinikanth, Rajinikanth, Vishnuvishal, Vikranth, Ar Rahuman, 05th Nov 2022

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் இரண்டு படங்களில் ஒரு படத்தை ‘டான்’ இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்க இருப்பதாகவும் இன்னொரு படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருப்பதாக கூறப்படுகிற நிலையில் அந்த இரண்டு படங்களின் அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Aishwarya Rajinikanth, Rajinikanth,  Vishnuvishal, Vikranth, Ar Rahuman, 05th Nov 2022

இந்த நிலையில ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தின் டைட்டில் ’லால் சலாம்’ என்றும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஒரு பவர்ஃபுல் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார் என்ற ஒருசில தகவல்கள் வெளியாகியுள்ளன.

Aishwarya Rajinikanth, Rajinikanth,  Vishnuvishal, Vikranth, Ar Rahuman, 05th Nov 2022

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படம் ஒரு கிரிக்கெட் கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.