வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.

முதல்கட்டமாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாக இருந்த நிலையில் சற்றுமுன் ‘வாரிசு’ படத்தின் ‘ரஞ்சிதமே’ என்ற பாடல் புரோமோ வெளியாகியுள்ளது. 30 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த பாடலின் புரமோ வரிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
‘ரஞ்சிதமே ரஞ்சிதமே மனசை கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்னை உதடு வலிக்க கொஞ்சணுமே’
இரண்டு வரிகள் மட்டும் இருக்கும் இந்த பாடலை தமன் இசையில் விஜய் பாடியுள்ள இந்தப்பாடலை விஜய் ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி வருவதுடன் விஜய்யின் அபாரமான டான்ஸ், பிரமாண்ட செட் ஆகியவை இந்த 30 வினாடி காட்சிகளில் தெரியவருகிறது.

இந்த பாடலின் முழுவடிவம் வரும் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த பாடலை கேட்க விஜய் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர்.