‘தளபதி 67’ படத்தில் நடிப்பதை மறைமுகமாக உறுதி செய்த பிரபல நடிகர்

பொங்கல் தினத்தில் விஜயின் ’வாரிசு’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் விஜயின் அடுத்த படமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ’தளபதி 67’ படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Vijay, Thalapathy 67, Unnimukunthan, Logesh Kanagaraj, 03rd Nov 2022

‘விக்ரம்’ என்ற மாபெரும் வெற்றி படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கயிருக்கும் படம் என்பதாலும் ’மாஸ்டர்’ படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் அவர் இணைய இருப்பதாலும் இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

Vijay, Thalapathy 67, Unnimukunthan, Logesh Kanagaraj, 03rd Nov 2022

இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தில் ஏற்கனவே பிரபல மலையாள நடிகர்கள் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது மற்றொரு மலையாள நடிகரான உன்னி முகுந்தன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் ’மாஸ்டர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போலவே செல்பி ஒன்றை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ’தளபதி 67’ படத்தில் நடிப்பதை மறைமுகமாக உறுதி செய்து இருக்கிறார்.

Vijay, Thalapathy 67, Unnimukunthan, Logesh Kanagaraj, 03rd Nov 2022

ஏற்கனவே தளபதி 67 படத்தில் பல முக்கிய பிரமுகர்கள் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்னும் எத்தனை பிரபலங்கள் இந்த படத்தில் இணைவார்கள்? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.