தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என திரையுலகினர் ரசிகர்கள் என பலர் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தனர். பல ரசிகர்கள் சமந்தாவுக்கு ஆறுதலாக சில வார்த்தைகள் நேரில் சென்று நாக சைதன்யா கூற வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
இந்தநிலையில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று சமந்தாவை மருத்துவமனையில் நாக சைதன்யா சென்று பார்த்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து இரு தரப்பினரும் விசாரித்தபோது இந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்று தெரியவந்துள்ளது.

நாகசைதன்யா தற்போது படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதாகவும் சமந்தா தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார் எனவே சமந்தாவை மருத்துவமனையில் சென்று நாக சைதன்யா பார்த்ததாக கூறப்படுவது முழுக்க முழுக்க வதந்தியான தகவல் என்று கூறப்பட்டுள்ளது.