ஷாருக்கான் நடித்து வரும் ’ஜவான்’ என்ற திரைப்படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது விஜய்யின் அடுத்த படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அட்லி இயக்கத்தில் அனிருத் இசையில் ஷாருக்கான், நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் ஒரே ஒரு நாள் மட்டும் அவர் கால்சீட் கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தியை படக்குழுவினர்கள் உறுதி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவாக இருக்கும் ’தளபதி 67’ படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் தரப்பில் இருந்து ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ’தளபதி 67 படத்தில் பல பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தில் ஷாருக்கானும் இணைவதாக வெளி வந்திருக்கும் தகவல் விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.