விஜய் பட நடிகர் நடித்த ‘யூகி’ டீசர் ரிலீஸ்

விஜய் நடித்த பிகில், பரியேறும் பெருமாள் உள்பட பல திரைப்படங்களில் நடித்த கதிர் நடிப்பில் உருவாகியுள்ள ‘யூகி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Kathir , nairen, kayal ananthi, Jack Harish, Pavithra Ludshmi, Pushparaj, 1th Nov 2022

இந்த டீசரில் ஒரு பெண் மர்மமான முறையில் காணாமல் போயுள்ள நிலையில் அந்த பெண்ணை கண்டுபிடிக்க போலீசார் திணறி வருகின்றனர். இந்த நிலையில் கதிர் தனியாளாக நின்று அந்த பெண்ணை கண்டுபிடித்து அவரின் பின்னால் உள்ள மர்மத்தை கண்டுபிடிப்பதுதான் இப் படத்தின் கதை என டீசரில் இருந்து தெரிய வருகிறது.

ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கதிர், நரேன், நட்டி நட்ராஜ், கயல் ஆனந்தி, பவித்ரா லட்சுமி, பிரதாப் போத்தன், முனிஸ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளதுடன் இந்த படத்திற்கு புஷ்பராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் ஜாமின் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Kathir , nairen, kayal ananthi, Jack Harish, Pavithra Ludshmi, Pushparaj, 1th Nov 2022

மேலும் இந்த படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் நவம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.