பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ஜப்பானில் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படம் ஜப்பானில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

முதல்முதலில் ஜப்பானில் ரிலீஸான தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’முத்து’ திரைப்படம் என்பதும் அதன் பிறகு ரஜினியின் அனைத்து படங்களும் ஜப்பானில் ரிலீஸ் ஆகி வருகிறது என்பது யாவரும் அறிந்ததே.
இதனையடுத்து ‘கைதி’,’ஆர்.ஆர்.ஆர்’ உள்பட பல இந்திய திரைப்படங்கள் தற்போது ஜப்பானில் ரிலீஸ் ஆகி வருகின்றன. அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படம் ஜப்பானில் நவம்பர் 18 ஆம் தேதி ரிலீசாக உள்ளதாகவும் இதற்கான பணிகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த ’மாஸ்டர்’ திரைப்படம் தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் ஜப்பானிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.