வாரிசு திரைப்படத்தை அடுத்து தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தின் தகவல்கள் ஒவ்வொன்றாக நாளுக்கு நாள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்தநிலையில் ஏற்கனவே இந்த படத்தில் மூன்று முன்னணி நாயகிகளான சமந்தா, கீர்த்தி சுரேஷ் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிக்கவிருப்பதாக்வும் அதுமட்டுமின்றி ஆக்சன் கிங் அர்ஜுன், சஞ்சய்தத், கௌதம்மேனன், பிரித்விராஜ் சுகுமாரன் உட்பட பலர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் புரட்சி தளபதி விஷால் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஷால் வில்லனாக நடிக்கிறாரா? அல்லது தளபதி விஜய்க்கு கை கொடுக்கும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
மேலும் தளபதி விஜய் மற்றும் புரட்சி தளபதி விஷால் இணைந்து ஒரே படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டால் இந்த படம் தமிழ் திரை உலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.