காஜல் அகர்வால் மாறுபட்ட இரண்டு வேடத்தில் நடித்திருக்கும் ‘கோஸ்டி’ டீசர்

கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால் முக்கிய இரண்டு வேடத்தில் நடித்த ‘கோஸ்டி’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Kalyan, KS ravikumar, Kajalagarwal, Urvasi, Yogibabu, Ghosty, 31th Oct 2022

இந்த படத்தில் இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ள காஜல் அகர்வால் ஒரு கேரக்டர் போலீஸ், இன்னொரு கேரக்டர் சினிமா நடிகை. சினிமா நடிகை செய்த ஒரு சிறிய தவறு காரணமாக போலீஸ் காஜல் அகர்வாலை பேய் பிடித்து விட அந்த பேயை விரட்ட பல்வேறு முயற்சிகள் எடுப்பது தான் இந்த படத்தின் காமெடியான கதை என்பது டீஸரில் இருந்து தெரியவருகிறது.

Kalyan, KS ravikumar, Kajalagarwal, Urvasi, Yogibabu, Ghosty, 31th Oct 2022

மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், யோகிபாபு, கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி, உள்பட பலரும் நடித்துள்ளனர். இயக்குனர் கல்யாண் ஏற்கனவே ’குலேபகாவலி’,’ஜாக்பாட்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாகேப் ரத்னராஜ் ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவான இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.