அறிமுக இயக்குனருடன் அசோக் செல்வனின் ‘நித்தம் ஒரு வானம்’ ட்ரைலர்

அறிமுக இயக்குநரான கார்திக்கின் இயக்கத்தில் நடிகர் அசோக்செல்வன் நடித்த ’நித்தம் ஒரு வானம்’ என்ற படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

கோபி சுந்தர் இசையில், விது அய்யண்ணா ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் ரொமான்ஸ் மற்றும் காமெடி கலந்த இந்த படத்தின் நாயகிகளாக ரிது வர்மா, மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்துள்ள நிலையில் இந்த ட்ரெய்லர் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த ட்ரைலரில் அசோக் செல்வனை விரட்டி விரட்டி காதலிக்கும் அபர்ணா பாலமுரளி மற்றும் ரிதுவர்மாவை காதலிக்கும் அசோக் செல்வன் என ஒரு முக்கோண காதல் கதை போல் தெரியவருகிறது.

இந்த படம் அசோக் செல்வனுக்கு மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டிரைலரை நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.