சமந்தாவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியிருக்கும் ‘யசோதா’ டிரைலர்

ஹரி – ஹரிஸ் இயக்கத்தில் மணிசர்மா இசையில் உருவாகியுள்ள நடிகை சமந்தா நடித்த ’யசோதா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகி நவம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையதளங்களின் வழியாக வைரலாகி வருகிறது.

Hari Harish, Manisharma, Yashoda, Samantha, 27th Oct 2022

இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த ட்ரைலரில் யசோதாவாக உள்ள சமந்தா கர்ப்பமாக இருப்பது போன்றும் அதன் பிறகு அந்த குழந்தையை அவர் பெற்றெடுத்தவுடன் அவர் சந்திக்கும் பிரச்சினை குறித்தும் அவரை சுற்றி ஏற்படுத்தியுள்ள சூழ்ச்சி குறித்தும் தெரிந்து கொண்டபின் அவர் எப்படி கொந்தளித்து எழுகிறார் என்பதும், தனது குழந்தையை எப்படி காப்பாற்றுகிறார் என்றும் என்பதுதான் இந்த படத்தின் கதை என ட்ரைலரில் இருந்து தெரியவந்துள்ளது.

Hari Harish, Manisharma, Yashoda, Samantha, 27th Oct 2022

மேலும் இப்படத்தின் அமைதியான அன்பான கர்ப்பிணியாகவும், அதேசமயம் ஆக்ரோஷமாக அடிதடியில் இறங்கும் ஒரு பெண்ணாகவும் மாறுபட்ட நடிப்பில் நடிகை சமந்தா நடித்துள்ளார். அவருடைய நடிப்பு இந்த படத்தில் வித்தியாசமாக உள்ளதால் இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.