அஜித் நடிப்பில்உருவாகியுள்ள ’துணிவு’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் அஜித்தின் அடுத்த படமான ’ஏகே 62’ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது தெரிந்ததே.

’ஏகே 62’ படத்தில் அஜீத் ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அஜித்துடன் நடிகை த்ரிஷா ’ஜி’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’ மற்றும் ’என்னை அறிந்தால்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பதும் இந்த படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஐந்தாவது முறையாக அஜித்துடன் த்ரிஷா இணைய உள்ளதாக வெளிவந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
