வெளிநாடு ஒன்றில் பிறந்தநாளை கொண்டாடிய அமலா பால் – படங்கள் இணையத்தில் வைரல்

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை அமலா பால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாலைத்தீவு சென்றார் அங்கிருந்து கொண்டு அவர் பதிவு செய்த சிங்கிள் பீஸ் பிகினி புகைப்படங்கள் உள்பட பல கிளாமர் புகைப்படங்கள் இணையத்தை ஸ்தம்பிக்க வைத்தது.

Amalapaul, 27th Oct 2022

இந்த நிலையில் நடிகை அமலாபால் தற்போது மாலைத்தீவு டூரை முடித்துவிட்டு லண்டன் சென்றுள்ள நிலையில் நேற்று அமலாபால் தனது 31வது பிறந்தநாளை லண்டனில் கொண்டாடியுள்ளார். லண்டனில் பிறந்த நாள் உடையுடன் விதவிதமான போஸ்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

நடிகை அமலாபால் ’கடாவர்’ என்ற திரைப்படத்தில் நடித்து அதன் பின்னர் மம்முட்டியுடன் ’கிறிஸ்டோபர்’ உள்பட 3 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.