பிரபல இயக்குனரின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜான்சி’ டிரைலர் வெளியீடு

விஷால் நடித்த ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘சமர்’ ’நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் திரு இயக்கத்தில் தமிழ் திரை உலகின் நடிகைகளில் ஒருவரான அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜான்சி’ என்ற வெப்தொடர் இன்று வெளியாக இருக்கும் நிலையில் இதன் ட்ரெய்லர் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

Santhini Sowthri, Samyuktha, Anjali, Jhanci, Thiru, Krishna, 27th Oct 2022

மேலும் இந்தப்படத்தின் நேற்று நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை அஞ்சலி, இயக்குனர் திரு உள்பட இந்த படத்தின் குழுவினர் கலந்து கொண்டனர். அஞ்சலி முக்கிய வேடத்தில் நடித்துள்ள படத்தில் அவருடன் சாந்தினி சவுத்ரி, ஆதர்ஷ் பாலகிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடரின் கதையானது ஜான்சி என்ற கேரக்டரில் நடித்துள்ள அஞ்சலி தனது பழைய நினைவுகளை மறந்து விடுகிறார். அவர் தற்போது கணவர், குழந்தை என சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவருக்கு பழைய ஞாபகம் வருகிறது. அப்போது அவர் யார்? அவரது எதிகள் யார்? என்பது தெரியவருகிறது. இதனை அடுத்து நடைபெறும் பரபரப்பான சம்பவங்கள் தான் இந்த தொடரின் மீதி கதை என்பது டிரைலரில் இருந்து தெரியவருகிறது.

Santhini Sowthri, Samyuktha, Anjali, Jhanci, Thiru, Krishna, 27th Oct 2022

மேலும் நடிகர் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த தொடர் இன்று முதல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது என்பதும் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.