சந்தானத்தின் ‘ஏஜண்ட் கண்ணாயிரம்’ படத்தின் மாஸ் அப்டேட்

மனோஜ் பிதா இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகிவரும் ‘ஏஜண்ட் கண்ணாயிரம்’ என்ற திரைப்படம் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்த்துள்ளனர்.

Agent Kannayiram, Santhanam, Manoj beedha, Yuvan Shankar Raja, 26th Oct 2022

இந்நிலையில் இந்த படம் நவம்பர் மாதம் ரிலீசாகும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நவம்பர் 25 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Agent Kannayiram, Santhanam, Manoj beedha, Yuvan Shankar Raja, 26th Oct 2022

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் இந்தப்படத்தில் சந்தானம், ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஸ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் ‘கிக்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.