தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை ஏற்கனவே விற்பனை ஆகிவிட்டதாகவும் அதுமட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளில் ரிலீஸ் உரிமையும் விற்பனை ஆகி விட்டதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ‘தளபதி 67’ படத்தை தயாரிக்க உள்ளதும் ‘மாஸ்டர்’ படத்தை தயாரித்துள்ளதுமான செவன்ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ‘வாரிசு’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தொகைக்கு விற்பனையாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது. மேலும் இப்படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.
