அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ திரைப்படம் வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் 67வது திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக அமைந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகயிருக்கும் இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், இயக்குனர் கௌதம் மேனன், சஞ்சய் தத் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லன் வேடத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குனர் மிஷ்கினிடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இயக்குனர் மிஷ்கின், சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’மாவீரன்’ திரைப்படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.