சமீபத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் நடிகை த்ரிஷா நடித்து இருந்தார் என்பதும் இந்த கேரக்டரில் அவர் மிகப் பொருத்தமாக இருந்தார் என்றும் பல கருத்துக்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து நடிகை திரிஷா நடித்து வரும் ’தி ரோடு’ என்ற திரைப்படத்தில் அதிரடி ஆக்ஷன் கேரக்டரை கையில் எடுத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் தீபாவளி சிறப்பு வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகும் இப்படம் கடந்த 2000ம் ஆண்டு மதுரையில் நடந்த உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகின்றது. இந்தப் படத்தில் த்ரிஷா உடன் சந்தோஷ் பிரதாப், சபீர், மியா ஜார்ஜ், எம்எஸ் பாஸ்கர் உள்பட பலர் நடிக்கின்றனர்.
