பிரின்ஸ், சர்தார் வந்தாலும் மல்லுக்கட்டும் பொன்னியின் செல்வன் வசூல் நிலவரம்

’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்திற்கு ஏராளமான விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளது. பொன்னியின் செல்வன் நாவலை படித்த அனைவருமே இந்த படத்தை பார்க்க தியேட்டருக்கு குவிந்து வருவதால் இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தீபாவளிக்கு பிரின்ஸ், சர்தார் என இரண்டு பெரிய படங்கள் வந்தது. இந்த இரண்டு படங்களுமே நல்ல வசூலை பெற்றுவரும் நிலையில், அதையும் தாண்டி பொன்னியின் செல்வன் 220 திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது.

தீபாவளி தினமான நேற்று மட்டுமே இப்படம் ரூ 3.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 220 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ponniyin Selvan, Trisha, vikram, திரிஷா, பொன்னியின் செல்வன், விக்ரம்