ஒரே ஒரு படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவர் விஜய்க்கு கதை கூறியிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

’கோமாளி’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் திரையுலகில் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தற்போது ’லவ் டுடே’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்த ’கோமாளி’ என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கி இதுவரை ரிலீஸ் செய்துள்ள பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் தளபதி விஜய்யை சந்தித்து கதை கூறி உள்ளதாகவும் விஜய்க்கு தனது கதை பிடித்து உள்ளதாகவும் ஆனால் இந்த படம் எப்போது உருவாகும் என்பது தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே வாரிசு படத்தில் நடித்து வரும் விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் நிலையில் 68வது படத்தை அட்லி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னரும் விஜய்க்கு ஆர்.ஜே.பாலாஜி உள்பட பலர் ஏற்கனவே கதை கூறியுள்ள நிலையில் பிரதீப் ரங்கநாதனுக்கு விஜய்யின் படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்குமா? என்பது கேள்விக்குரிய விடயமாகும்.