
’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன்பின்னர் தனுசுடன் ’நய்யாண்டி’ உள்பட ஒருசில சில படங்களில் நடித்துள்ள நடிகை நஸ்ரியா தான் ஸ்கை டைவிங் செய்துள்ள புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
நடிகை நஸ்ரியா ராஜாராணி உள்பட ஒரு சில படங்களில் நடித்து அதன் பின்னர் பிரபல நடிகர் பகத் பாசிலை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அதன் பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

இந்த நிலையில் தற்போது நஸ்ரியா துபாய் சென்று இருக்கும் துபாயில் ஸ்கை டைவிங் செய்த த்ரில் காட்சிகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விமானத்திலிருந்து ஸ்கை டைவிங் பயிற்சியாருடன் அந்தரத்தில் குதித்த நஸ்ரியா, துபாயின் மொத்த அழகை கண்டு ரசித்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இந்த அனுபவம் தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் தனது கனவு நனவானதாகவும் நடிகை நஸ்ரியா இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் , கமெண்ட்ஸ்கள் பல குவிந்துள்ளன.