ஐஸ்வர்யா ரஜினியின் அடுத்த படம் குறித்த மாஸ் அப்டேட்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கும் அடுத்த படத்தின் பூஜை நவம்பர் முதல் வாரம் நடைபெற இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏற்கனவே தனுஷ் நடித்த ‘3’ மற்றும் கெளதம் கார்த்திக் நடித்த ’வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது அவர் அடுத்த படத்தை விரைவில் இயக்க உள்ளதாக கூறப்படுகின்றது.

Aishwarya rajinikanth, 20th Oct 2022

இவர் இயக்கவிருக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் வரும் நவம்பர் முதல் வாரத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற உள்ளதாகவும் அதனை அடுத்து படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு பூஜை தினத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aishwarya rajinikanth, 20th Oct 2022

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் பாலிவுட் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. ‘ஓ சாதிசால்’ என்ற டைட்டில் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன்பின் இந்த படம் குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை.