
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ’தி கிரேட் இந்தியன் கிட்சன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய ஜோபேபி இயக்க இருக்கும் அடுத்த திரைப்படம் ’காதல்’. இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் ஜோதிகா இணைந்து நடிக்கவுள்ளதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு நேற்று ஜோதிகாவின் பிறந்த நாளின் போது வெளியான நிலையில் இந்த படத்தின் குழுவினர்களுக்கு சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

மேலும் சூர்யா தனது ட்விட்டரில் இந்த படத்தின் ஐடியா மற்றும் ஒவ்வொரு பணிகளையும் நான் முதல் நாளில் இருந்தே கவனித்து வருகிறேன். இயக்குனர் ஜோபேபி மிகவும் சூப்பராக செயல்பட்டு வருகிறார். மம்முட்டி, ஜோதிகா மற்றும் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது மனைவி ஜோதிகாவுக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

கடந்த 1990 இல் நடக்கும் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு மாத்யூஸ் இசையமைக்க இருக்கிறார். மலையாளத்தில் உருவாகும் இந்தப் படம் தமிழிலும் டப் செய்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.