
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஆந்திராவில் தொடங்கிய நிலையில் இந்த படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது ‘சார்பாட்டா பரம்பரை’ படத்தில் சூப்பராக நடித்து பாராட்டை பெற்ற பசுபதி இணைந்து உள்ளதாகவும் விரைவில் பசுபதி இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகின்றது.

ஏற்கனவே ’அருள்’ ’மஜா’, ‘தூள்’, ‘10 எண்றதுக்குள்ள’ ஆகிய படங்களில் விக்ரம் மற்றும் பசுபதி இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் இணைந்து உள்ளனர்.

ஜிவி பிரகாஷ் ஒளிப்பதிவில் கிஷோர் குமார் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் ’பூ’ பார்வதி நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. இந்த படம் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலத்தின் ஒரு பீரியட் கதையாக அமையும் என்று கூறப்படுகின்றது.