உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் விஜய் டிவி பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்களின் ஆதரவு இம்முறையும் தொடர்வதை காணக்கூடியதாகவுள்ளது.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதில் டிஆர்பி ரேட்டிங்கில் அதிகம் செல்வாக்கு செலுத்தும் அதிக ரசிகர்களை கொண்ட ஜி பி முத்து ஆரம்பம் முதலே நிகழ்ச்சியை தெறிக்கவிட்டுள்ளார். இந்நிலையில் ஜி பி முத்து தனது உடைகள் உடனடியாக வரவேண்டும் என்று தனது பாணியில் மிரட்டும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.