குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசைப்படும் பிரபல நடிகை .. விரைவில் திருமணம்

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. இவர் நடிப்பில் அண்மையில் எந்த ஒரு தமிழ் திரைப்படமும் வெளிவரவில்லை. ஆனால், தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தமன்னா நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamanah, Jailor, 16th Oct 2022

இந்நிலையில், நடிகை தமன்னா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளது என்னவென்றால்: 24 மணி நேரமும் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன் என்றும், அதனால் திருமணம் பற்றி யோசிக்க நேரமில்லை என்றும் கூறியுள்ளார்.

Tamanah, Jailor, 16th Oct 2022

அதற்காக திருமணமே வேண்டாம் என்று அர்த்தமில்லை. விரைவில் கண்டிப்பாக திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை உள்ளதாகவும் தமன்னா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.