‘சர்தார்’ படத்தின் டிரைலருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரபல நடிகர்

கார்த்தி நடித்த சர்தார் படத்தின் டிரைலருக்கு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டில், ‘என்ன ஒரு வலிமையான அனைவரையும் ஈர்க்கக்கூடிய ட்ரெய்லர், வலிமையான கண்டெண்ட் தான் ஜெயிக்கும், ‘சர்தார்’ பட குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். மேலும் பத்தவச்சு பறக்க விட்டுட்டீங்க!.. என்றும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Karthi, Rashikhanna, Suriya, Sardar, Gv Pirakash, PS mithran, 15th Oct 2022

இந்த நிலையில் நேற்று ’சர்தார்’ படத்தின் டிரைலர் விழா நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் பேசிய கார்த்தி, ‘அண்ணன் சூர்யாவுக்கு ’அயன்’ திரைப்படம் பலவிதமான கெட்டப் உள்ள ஒரு திரைப்படமாக அமைந்தது. அதேபோல் ’சர்தார்’ திரைப்படம் எனக்கு பல கெட்டப்புகளில் வரும் படமாக அமைந்துள்ளது. என்றும் இந்த படம் நிச்சயம் அனைவரையும் கவரும்’ என்றும் கூறியுள்ளார்.

மேலும் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.