தளபதி விஜய் தற்போது ’வாரிசு’ திரைப்படத்தை அடுத்து அவர் நடிக்க இருக்கும் திரைப்படமான ’தளபதி 67’ படம் குறித்த தகவல்கள் ஒவ்வொரு நாளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

விஜய் நடிக்கவிருக்கும் இந்த படத்தில் கௌதம் மேனன், சஞ்சய்தத் உள்பட 6 வில்லன்கள் நடிக்க இருப்பதாகவும் த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. அது மட்டுமின்றி இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாகவும் குறிப்பாக ’விக்ரம்’ படத்தில் நடித்த நடிகை வசந்தி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் யுனிவர்ஸில் இணைய பல நட்சத்திரங்கள் காத்திருக்கும் நிலையில் சமீபத்தில் அவரது நண்பரான பிரபல நடிகர் கலையரசன், லோகேஷை சமீபத்தில் சந்தித்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் ‘நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது நண்பர் லோகேஷ் கனகராஜை சந்தித்தேன் என்றும் வழக்கம்போல் ’தளபதி 67’ படத்திலும் நான் இல்லை என்று அவர் கூறினார் என்றும் இருப்பினும் எங்கள் நட்பு தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
