‘பிரின்ஸ்’ படத்தின் அட்டகாசமான டிரைலர் ரிலீஸ்!

தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ’பிரின்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

Sivakarthikeyan, Mariya, Prince, Anudhip, 10th Oct 2022

சிவகார்த்திகேயனின் ’பிரின்ஸ்’ படம் ரிலீஸுக்கு முன்னரே தயாரிப்பாளருக்கு லாபத்தை தரும் அளவிற்கு மிகப் பெரிய வியாபாரம் நடந்துள்ளது என்பது செய்தி ஆகும். இந்த நிலையில் ’பிரின்ஸ்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில் தற்போது டிரைலர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Sivakarthikeyan, Mariya, Prince, Anudhip, 10th Oct 2022

இந்த டிரைலரில் இருந்து இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு ஆசிரியராக நடித்துள்ளார் என்பதும் அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் மரியா உடன் காதல் ஏற்படுகிறது என்பதும் இந்த காதலால் ஏற்படும் பிரச்சனை என்ன?என்பதை நகைச்சுவையுடன் இயக்குனர் அனுதீப் இந்த கதையை கூறியுள்ளார்.

உக்ரைன் நாட்டின் நடிகை மரியா அழகு தேவதையாக இந்த படத்தில் வலம் வருகிறார். சத்யராஜ் இந்த படத்தில் ஒரு முக்கிய சமூக பிரச்சனையை அலசும் கேரக்டரில் நடித்துள்ளார். மொத்தத்தில் சிவகார்த்திகேயனின் ஹாட்ரிக் வெற்றி படமாக ’பிரின்ஸ்’ படம் அமைய இருப்பது டிரைலரின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.