‘ஏஜண்ட் கண்ணாயிரம்’ படம் குறித்து படக்குழுவினர் வெளியிட்ட வீடியோ பதிவு!!

நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’.

Manoj pitha, Santhanam, Yuvan Shankar Raja, 9th Oct 2022

மனோஜ் பிதா என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் மேலும் இந்த படத்தின் 2 நிமிட வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இந்த மேக்கிங் வீடியோவில் சந்தானம் நடித்த அதிரடி ஆக்சன் காட்சிகள், காமெடி காட்சிகள் ஆகியவை உள்ளன.

Manoj pitha, Santhanam, Yuvan Shankar Raja, 9th Oct 2022

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் சந்தானம், உள்பட பலர் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், உருவாக்கி வரும் இந்த படம் வரும் நவம்பரில் வெளியாகும் என இந்த வீடியோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் ‘கிக்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.