இயக்குனர் ஹீரோவாக மாறிய ‘லவ்டுடே’ படத்தின் ட்ரைலர்

Pradeep Rnganathan, Ivana, sathiyaraj, Radhika, Yokibabu, 6th Oct 2022

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிய ’கோமாளி’ என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது தானே ஹீரோவாக நடித்த திரைப்படம் தான் ’லவ்டுடே’. இந்த படம் வரும் நவம்பர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Pradeep Rnganathan, Ivana, sathiyaraj, Radhika, Yokibabu, 6th Oct 2022

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஹீரோ பிரதீப் மற்றும் ஹீரோயின் இவானா ஆகிய இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில் நாயகியின் தந்தை சத்யராஜிடம் திருமணத்திற்கு அனுமதி கேட்கின்றனர். அப்போது சத்யராஜ், ‘ஒரே ஒரு நாள் உங்களுடைய செல்போன்களை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள், அதன் பிறகு நீங்கள் காதலில் உறுதியாக இருந்தால் திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறுகிறார்.

Pradeep Rnganathan, Ivana, sathiyaraj, Radhika, Yokibabu, 6th Oct 2022

அந்த ஒரு நாளில் என்னென்ன மாற்றங்கள் நடந்தது? என்னென்ன பிரச்சனைகள் ஏற்பட்டது? என்பதை காமெடி கலந்து ரொமான்ஸ் படமாக இயக்குனர் பிரதீப் இயக்கியுள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பிரதீப் ரங்கநாதன், இவானா அகியோர்களுடன் சத்யராஜ், யோகி பாபு, ராதிகா சரத்குமார், ரவீனா, ஆஜித் உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையில், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில், பிரதீவ் ராகவ் படத்தொகுப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.