விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் குஷ்பு நடிக்கின்றாரா? பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படம்

தளபதி விஜய் நடிப்பில் அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக வரவிருக்கும் திரைப்படம் ‘வாரிசு’ . இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் திடீரென இந்த படத்தின் படப்பிடிப்பின்போது குஷ்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Varisu, Vijay, Sarathkumar, Pirabu, 5th Oct 2022

‘வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் குறிப்பாக சரத்குமார் மற்றும் பிரபு ஆகிய இருவருடன் எடுக்கப்பட்ட குஷ்புவின் புகைப்படத்தால் ‘வாரிசு’ திரைப்படத்தில் குஷ்பு நடிப்பதாகவும் படப்பிடிப்பிற்காக தான் அவர் வந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்ததுடன் ஏற்கனவே விஜய் மற்றும் குஷ்பு இணைந்து ’வில்லு’ மற்றும் ’மின்சார கண்ணா’ ஆகிய படங்களில் இணைந்து நடித்த நிலையில் மீண்டும் ‘வாரிசு’ படத்தில் இருவரும் இணைந்து நடித்து வருவதாக கூறப்பட்டது.

Varisu, Vijay, Sarathkumar, Pirabu, 5th Oct 2022

இந்த நிலையில் சமீபத்தில் குஷ்பு அளித்த பேட்டியில், ‘வாரிசு’ திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என்றும் ‘வாரிசு’ படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு நான் சென்றபோது பிரபு மற்றும் சரத்குமாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன் என்றும் மற்றபடி ‘வாரிசு’ படத்திற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதிலிருந்து ‘வாரிசு’ திரைப்படத்தில் குஷ்பு நடிக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது.