சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ ரிலீஸ் தேதி – கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் தமன் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிரின்ஸ்’. இத்திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

Anudip, Thaman, Sivakarthikeyan, Prince, 4th Sep 2022

இந்த நிலையில் இந்த படம் தீபாவளி விருந்தாக வெளியாகும் என கடந்த சில வாரங்களாக அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த படம் அக்டோபர் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Anudip, Thaman, Sivakarthikeyan, Prince, 4th Sep 2022

மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய அட்டகாசமான போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதுடன் இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.