பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரரா?

Biggboss, Kamalhazaan, 4th Oct 2022

விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் 9-ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தகவல் வந்த வண்ணம் உள்ளன. மேலும் இந்த சீசன் ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை தொகுத்து வழங்கப்பட இருக்கும் நிலையில் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் திவ்யதர்ஷினி, ரோஷினி, தர்ஷ குப்தா, ராஜலட்சுமி, மைனா நந்தினி, மணிகண்டன், அமுதவாணன், ஜிபி முத்து, மனிஷா யாதவ், ஷில்பா மஞ்சுநாத், ஸ்ரீப்ரியா, மன்சூரலிகான், கிறிஸ்டோபர் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்த நிகழ்ச்சியின் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார் என்ற தகவல் வைத்த நிலையில் கிட்டத்தட்ட அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.