பிக்பாஸ் கேப்ரில்லாவுடன் காதலா – ஆஜித் சொன்ன பதில்

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் கிசுகிசு கிளம்புவதுண்டு. இந்தநிலையில் நான்காவது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் ஆஜித் மற்றும் கேப்ரில்லா என்பதும் இவர்கள் இருவரும் அவ்வப்போது நெருக்கமாக இருப்பதை பார்த்து காதலித்து வருவதாக கூறப்பட்டது.

மேலும் பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா-ஆரவ், இரண்டாவது சீசனில் மகத்-யாஷிகா, மூன்றாவது சீசனில் கவின் – லாஸ்லியா, நான்காவது சீசனில் பாலாஜி-ஷிவானி, ஐந்தாவது சீசனில் அமீர்-பாவனி ரெட்டி ஆகியோர் காதலித்ததாக கூறப்பட்டது. அந்த வகையில் தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆஜித் மற்றும் கேப்ரில்லா ஆகிய இருவரும் காதலர்கள் என்று தகவல் கசிந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆஜித் பாட்டு பாடி சக போட்டியாளர்களையும் ரசிகர்களையும் திருப்திபடுத்தி இந்த நிகழ்ச்சியில் தாக்கு பிடித்தார். அதேபோல் கேப்ரில்லா புத்திசாலித்தனமாக விளையாடியதுடன் அர்ச்சனாவின் அன்பு குரூப்பில் இணைந்து கொண்டு அவர் தன்னை பல நேரங்களில் எவிக்சனில் இருந்து காப்பாற்றிக் கொண்டார்.

Aajith, Gapyrialla, 4th Oct 2022

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போதே கேப்ரில்லா-ஆஜித் ஆகிய இருவருக்கும் காதல் உண்டானதாக தகவல்கள் வந்ததுடன் இந்த நிகழ்ச்சிக்கு பின்னரும் கூட இருவரும் நெருக்கமாக இருந்ததாக புகைப்படங்களும், நடனமாடிய வீடியோக்களும் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Aajith, Gapyrialla, 4th Oct 2022

இந்த நிலையில் கேப்ரில்லாவுடன் காதலா என்ற கேள்விக்கு சமீபத்தில் மனம் திறந்து பதில் கூறிய ஆஜித், ‘பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது நாங்கள் இருவரும் அதிக அளவு சண்டை போட்டோம். ஆனால் டிவியில் ஒரு சண்டையை கூட காட்டவில்லை. சண்டை போட்டாலும் உடனே நாங்கள் சேர்ந்து விடுவோம். எங்கள் இருவருக்கும் எப்போதும் காதல் உண்டானதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் நாங்கள் இருவரும் அண்ணன் தங்கை போல் தான் பழகி வருகிறோம் என்றும் தெரிவித்தார். அவருடைய இந்த பதில் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

Aajith, Gapyrialla, 4th Oct 2022