கிராபிக்ஸில் மிரட்டும் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ டீசர்!

நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்றான ‘ஆதிபுருஷ்’ என்ற திரைப்படம் சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக தமிழ் உள்பட 5 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

Adi purush, Pirabhas, Om Roud, Keerthy Sanon, 3rd Oct 2022

மேலும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார் என்பதும், மேலும் ஒரு முக்கிய வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓம் ரெளட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் ராமாயண கதையை தழுவி எடுக்கப்பட்டதாகவும் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த படத்தின் அனைத்து மொழி டீசர் வெளியாகி இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Adi purush, Pirabhas, Om Roud, Keerthy Sanon, 3rd Oct 2022

’வந்து கொண்டிருக்கிறேன தர்மத்தை நிலைநாட்ட ’ என்ற பிரபாஸின் ஆக்ரோஷமான வசனத்துடன் உள்ள இந்த டீஸரில் ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளதுடன் ஜெய் ஸ்ரீராம் கோஷம் அதிகமுள்ள இந்த படத்தை வட இந்தியர்கள் கொண்டாடுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.