கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோரின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘பத்து தல’ இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இப்படத்தின் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகர் கலையரசன் இணைந்துள்ளார். கலையரசன் தனது டுவிட்டர் பக்கத்தில் சிம்புவுடன் இந்த படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் இணைந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளதோடு சிம்புவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.